/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனநலம் காப்பது எப்படி; கருத்தரங்கில் விளக்கம்
/
மனநலம் காப்பது எப்படி; கருத்தரங்கில் விளக்கம்
ADDED : அக் 14, 2025 11:28 PM

உலக மனநல தினத்தையொட்டி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மனநலத்துறை மற்றும் ரொட்டேரியன் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி இணைந்து கருத்தரங்கத்தை நடத்தின.
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை 'டீன்' மனோன்மணி தலைமை வகித்தார். திருப்பூர் 'மைண்ட் விஷன் நியூரோ' மனநல ஆலோசனை மைய மருத்துவர் வெங்கடேஷ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மனநல பிரச்னைகள் பற்றியும் அதனை எதிர்கொள்வது பற்றியும் பேசினார். ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி தலைவர் அருள்செல்வம், மனநலத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.
உதவிப்பேராசிரியர் கலைச்செல்வி குடும்ப வன்முறை குறித்தும், டாக்டர் செந்தில்குமார் தற்கொலையும் அதற்கான காரணமும் குறித்தும், மனஅழுத்தம் பற்றி டாக்டர் சஞ்சய் போஸ் ஆகியோர் பேசினார். கருத்தரங்கில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவர், நர்சிங் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மனநலப்பிரிவு தலைமை மருத்துவர் விஸ்வநாதன் ஒருங்கிணைத்தார்.