/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய தபால் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்; தேசிய தபால் வார விழா
/
தேசிய தபால் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்; தேசிய தபால் வார விழா
தேசிய தபால் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்; தேசிய தபால் வார விழா
தேசிய தபால் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்; தேசிய தபால் வார விழா
ADDED : அக் 14, 2025 11:26 PM

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள தலைமை தபால் கோட்டம் சார்பில், தாராபுரம், மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் அலுவலகத்தில், ஒவ்வொரு நாளும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வினாடி - வினா போட்டி, செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்த வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மலைவாழ் மக்கள் நலன் கருதி பனகஹள்ளி, தாளவாடி மற்றும் அத்திக்கடவு, காரமடை உள்ளிட்ட பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. தபால் ஸ்டாம்ப் சேகரிப்பு நாள், உலக தபால் நாள் உள்ளிட்ட தினங்கள் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட்டது. சாந்தி நிகேதன் பள்ளியில் தபால்துறை குறித்த கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம், திருப்பூர் தலைமை தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துவங்கிய தபால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊர்வலம், குமரன் வணிக வளாகம், டவுன்ஹால், ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப் வரை சென்று மீண்டும் தபால் அலுவலகம் வந்தடைந்ததாக, திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் தெரிவித்தார்.