/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர் கரங்களில் போனஸ் திட்டமிட்டு செலவிடுவது எப்படி?
/
தொழிலாளர் கரங்களில் போனஸ் திட்டமிட்டு செலவிடுவது எப்படி?
தொழிலாளர் கரங்களில் போனஸ் திட்டமிட்டு செலவிடுவது எப்படி?
தொழிலாளர் கரங்களில் போனஸ் திட்டமிட்டு செலவிடுவது எப்படி?
ADDED : அக் 25, 2024 10:30 PM
பின்னலாடை நிறுவனங்கள் உள்பட திருப் பூரில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர், பணியாளர் பலருக்கும் போனஸ் கிடைத்திருக்கும்.
போனஸ் தொகையை பயன்படுத்துவது தொடர்பாக சரியான திட்டமிடல் அவசியமானது. பணம் கையில் வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால் வீண் செலவுக்குத்தான் வழிவகுக்கும்.
ஆடை, அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கடனைத் திருப்பிச் செலுத்துவது என எதற்குச் செலவு செய்ய வேண்டும் என்று திட்டமிடுங்கள். குடும்பத்தினருடன் கலந்து பேசுவதில் தவறில்லை.
வீட்டுக்கு வாங்க வேண்டிய முக்கியமான சில பொருட்களைப் பணமில்லை என வாங்காமல் காலம் தாழ்த்தி வந்திருந்தால், அவற்றை வாங்கலாம். ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வருமானம் ஈட்டு கின்றனர் எனில், அந்தக் குடும்பத்தின் போனஸ் மொத்த தொகை பெரிதாக இருக்கும். இதில் ஒருவரின் போனஸ் தொகையைச் செலவுகளுக் காகவும் மற்றவர்களின் போனஸ் தொகையை சேமிப்பு, முதலீடு என்றும் யோசிக்கலாம்.
ஹெல்த் இன்சூரன்ஸ், வாகன இன்சூரன்ஸ் போன்றவற்றில் ஏதேனும் காலாவதியாகி இருக்கிறதா என்பதை சோதித்து போனஸ் தொகையைப் பயன்படுத்தலாம்.
நமக்கோ, குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ நீண்டகால தேவைகளை, ஆசைகளை நிவர்த்தி செய்யவும் போனஸ் தொகையைப் பயன்படுத்தலாம்.
தீபாவளி போனஸ் தொகையில் குட்டி டிரிப் புக்குக் கூட திட்டமிடலாம். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கான அவசரச் செலவை சமாளிக்கும் வகையில் சேமிப்புக் கணக்கில் தொகை வைத்திருப்பது அவசியம். போனஸ் தொகையை அவசரகால நிதியாக வைத்துக் கொள்ளலாம்.
வேலை மற்றும் தொழில் சார்ந்து ஏதேனும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தால் முன்னேற்றப்பாதையில் செல்ல உதவியாக இருக்கும் என்றால் போனஸ் தொகையைப் பயன்படுத்தலாம்.
எதற்குச் செலவு செய்ய வேண்டும் என்று
திட்டமிடுங்கள். குடும்பத்தினருடன்
கலந்து பேசுவதில் தவறில்லை.