/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனைவி தற்கொலையால் கணவனும் துாக்கிட்டு சாவு
/
மனைவி தற்கொலையால் கணவனும் துாக்கிட்டு சாவு
ADDED : பிப் 09, 2025 01:15 AM

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, ராகல்பாவி ஆர்.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 34. புதுக்கோட்டை கறிக்கோழி உற்பத்தி நிறுவன மேலாளர். அவரது மனைவி அபிநயா, 29; மடத்துக்குளம் தனியார் நிதி நிறுவன ஊழியர். இருவரும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். தம்பதிக்கு, 9 வயதில் பெண் குழந்தை, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளனர்.
செல்வராஜ் வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் வந்த போது தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை, வீட்டு கழிப்பறையில் அபிநயா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடுமலை போலீசார் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செல்வராஜ் மருத்துவமனையில் அழுதபடி, சோகத்துடன் இருந்தார். திடீரென அவரை காணவில்லை. நண்பர்கள் தேடியபோது, மருத்துவமனையில் ஆள் நடமாட்டம் இல்லாத மின் அறையில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது.

