/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தில்லா திருப்பூர் உருவாக்க யோசனை
/
விபத்தில்லா திருப்பூர் உருவாக்க யோசனை
ADDED : ஜூலை 04, 2025 11:14 PM
திருப்பூர்; கலெக்டர் அலுவலகத்தில், சாலை பாதுகாப்புக்குழு கூட்டம், நடந்தது. இதில், போக்குவரத்து, நெடுஞ்சாலை, போலீசார், சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர் பங்கேற்றனர்.
இதில், மாவட்டத்தில் சாலை விபத்துகளை தவிர்ப்பது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்குரிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. இனி, மாதத்தின் முதல் மற்றும் கடைசி வாரத்தில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் திருப்பூரில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்ற விபரம் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், விபத்தில்லா நகரமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.