/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகளுக்கு அடையாள எண்; கைரேகை வாயிலாகவும் பதிவு
/
விவசாயிகளுக்கு அடையாள எண்; கைரேகை வாயிலாகவும் பதிவு
விவசாயிகளுக்கு அடையாள எண்; கைரேகை வாயிலாகவும் பதிவு
விவசாயிகளுக்கு அடையாள எண்; கைரேகை வாயிலாகவும் பதிவு
ADDED : ஏப் 06, 2025 09:47 PM
உடுமலை; உடுமலையில், விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டத்தில், மொபைல்போன் எண் இல்லையென்றாலும், கை ரேகை வாயிலாக பதிவு செய்யலாம், என வேளாண் துறை அறிவித்துள்ளது.
விவசாயிகள், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில், அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரித்து, ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கும் வகையில், வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் பதிவு விபரங்களுடன், ஆதார் எண், மொபைல்போன் எண், நில உடைமை விபரங்களையும் இணைக்கும் வகையில், வேளாண் துறை சார்பில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. மேலும், இ-சேவை மையங்களில், வரும், 15ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:
விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை, அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு மட்டுமன்றி, மானிய விலை உரம், கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விடுபட்ட விவசாயிகள் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். தற்போது, மொபைல்போன் எண் வாயிலாக ஓ.டி.பி., பெற முடியாத சிக்கல் உள்ள விவசாயிகளுக்கு, ஆதார் பதிவு கைரேகை வாயிலாகவும், பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, கூறினார்.