/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பக்தி பெரு கினால் கவலை நீங்கும்
/
பக்தி பெரு கினால் கவலை நீங்கும்
ADDED : ஜன 01, 2026 05:32 AM

திருப்பூர்: வாழும் கலை அமைப்பு சார்பில், ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக, புத்தாண்டு தெய்வீக இன்னிசை என்ற பெயரில் சத்சங்கம் நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி-யின் சீடர் சுவாமி ஸ்ரீ தேஜ் மற்றும் குழுவினர் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீ தேஜ் பேசியதாவது:
கஷ்டம் வரும் போது இறைவனை தேடுகிறோம்; சத்சங்கம், சுதர்சனகிரியை செய்வது மனம் நன்றாக இருப்பதற்கு தான். வாழ்வில் உயர வேண்டுமா மனதை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். சுகமாக மனசு இருந்தால் தான் நோக்கம் நிறைவேறும்; வெற்றி கிடைக்கும். மனசில் எண்ணங்கள் ஓடிக்கொண்டே அலைபாய்ந்து கொண்டே இருக்கும் போது, அதனை நிறுத்தி, அறிவாக, தெய்வீகமாக மாற்றுவது தான் ஆன்மிகம். அதற்காகவே கடவுளை புகழ்ந்து பாடி இன்பம் அடைகிறோம். நமது ஆன்மாக்களை உணர்வதற்கு பக்தி உதவுகிறது. பக்தி பெருகும் போது கவலை நீங்கும். இறைவனை புகழ்ந்து பாடும் போது, துன்பங்கள் அகலும்.

