/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அடியார்கள் மனம் உருகினால் முருகப்பெருமான் ஓடிவருவார்'
/
'அடியார்கள் மனம் உருகினால் முருகப்பெருமான் ஓடிவருவார்'
'அடியார்கள் மனம் உருகினால் முருகப்பெருமான் ஓடிவருவார்'
'அடியார்கள் மனம் உருகினால் முருகப்பெருமான் ஓடிவருவார்'
ADDED : ஜூலை 16, 2025 11:15 PM
திருப்பூர்; கொங்கு மண்டல ஆடல்வல்லான் அறக்கட்டளை சார்பில், 'பாம்பன் சுவாமிகள் அருளிய பொன்மயிற்கண்ணி' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது.
அதில், சொற்பொழிவாளர் பூர்ணிமாதேவி பேசியதாவது:
முருகப்பெருமானிடம் பேரன்பு கொண்டு, பக்தி செய்த அருளாளர்களுள், அருணகிரிநாதர் முதன்மையானவர்.
முருகனையே தன் மானசீக குருவாக ஏற்று, அளவில்லா பக்தி கொண்டு, ஆறாயிரத்து 66 பாடல்களை இயற்றியவர், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள். 19ம் நுாற்றாண்டில், தென் தமிழகத்தில் தோன்றிய இவர், மயூர பந்தம், சஸ்திரபந்தம் முதலான எட்டு பந்தங்களையும், பரஞ்சுடர்க்கண்ணி, குருபரக்கண்ணி, பொன்மயிற் கண்ணி போன்ற நுால்களையும் இயற்றியுள்ளார்.
தகராலய ரகசியம், கந்தர் ஒலியியல் அந்தாதி, சேந்தன் செந்தமிழ் போன்ற பல பக்தி இலக்கியங்களை ஆறு மண்டலங்களாக தொகுத்து அருளியுள்ளார்.
பொன்மயிற்கண்ணி எனும் நுாலில், பாம்பன் சுவாமிகள், தம் அகநிலையை, மயிலிடம் சொல்லி, முருகப்பெருமானுக்கு துாது அனுப்புவதாக அமைகிறது.
தன்னிடம் பக்தி கொண்டு மனம் உருகும் அடியார்களின் குறைதீர்க்க, முருகப்பெருமான் ஓடோடிவருவார். அவர்களின் குறை தீர்த்து, சகல நலன்களையும் அருள்வார் என்பது திண்ணம்.
இவ்வாறு, அவர் பேசினார்.