/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இப்படியே போனால்... மரம் வெட்டும் செயல் தொடர்ந்து அதிகரிப்பு மழை வருமா என பசுமை ஆர்வலர்கள் ஆதங்கம்
/
இப்படியே போனால்... மரம் வெட்டும் செயல் தொடர்ந்து அதிகரிப்பு மழை வருமா என பசுமை ஆர்வலர்கள் ஆதங்கம்
இப்படியே போனால்... மரம் வெட்டும் செயல் தொடர்ந்து அதிகரிப்பு மழை வருமா என பசுமை ஆர்வலர்கள் ஆதங்கம்
இப்படியே போனால்... மரம் வெட்டும் செயல் தொடர்ந்து அதிகரிப்பு மழை வருமா என பசுமை ஆர்வலர்கள் ஆதங்கம்
ADDED : ஜன 09, 2024 12:24 AM

மனிதனின் முதல் நண்பன் மரம்...மரத்தின் முதல் எதிரி மனிதன்!
- என்கிறார் கவிஞர் வைமுத்து. அவர் கூறியது எவ்வளவு துாரம் உண்மை என்பது, அவிநாசியில் கடந்த இரு நாட்களாக நடந்த மரக்கொலைகளே (?) சாட்சி. கிளைகளை தானே வெட்டுகிறோம் என்றாலும், அதுவும் ஒரு மரத்தின் அங்கம் என்பதை யாரும் உணர்வதில்லை.
'பசுமையை வளர்க்க மரக்கன்று நட வேண்டும்,' என தமிழக அரசு ஒருபுறம் பிரசாரம் செய்யும் நிலையில், அதனை ஆளுங்கட்சியினரே அடிக்கடி மீறுவது வேதைனயளிப்பதாக உள்ளது,' என்று பசுமை ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
அவிநாசி பேரூராட்சி, 11வது வார்டு பகுதிகளான காமராஜர் வீதி, அண்ணா வீதி, ராஜாஜி வீதி, இஸ்மாயில் வீதி, ஈ.வெ.ரா., வீதி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளின் மேல் மரங்கள் உராய்வதாகவும், இதனால் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பகுதி வாழ் மக்கள் கவுன்சிலரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த நவ., 29ம் தேதி தாசில்தார் மோகனனிடம் 11வது வார்டு கவுன்சிலர் திருமுருகநாதன் மரக்கிளைகளை வெட்ட அனுமதி கேட்டுள்ளார். தாசில்தார் கிளைகளை வெட்டுவதற்கு மட்டும் அனுமதி அளித்து பேரூராட்சி செயல் அலுவலருக்கு பரிந்துரைத்துள்ளார்.
கடந்த 6ம் தேதி அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக மின் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, தாசில்தார் அனுமதித்த அளவுகளையும் தாண்டி மரங்களின் கிளைகளை வெட்டி உள்ளனர்.
இதில் மின் கம்பியில் எந்த விதத்திலும் உராய்வு இல்லாமல் செல்லும் இடங்களில் உள்ள மரங்களின் பெரிய விழுதுகள் கூட வெட்டப்பட்டது. இதில் பதினைந்துக்கும் மேற்பட்ட மரத்தின் பெரிய கிளைகள் வெட்டப்பட்டன.
பசுமை ஆர்வலர்கள் கூறியதாவது:
வீடுதோறும் மரக்கன்று நடுங்கள் என அரசே பிரசாரம் செய்கிறது. ஆனால், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மரங்களை வெட்டும் போக்கு தொடர்கதையாக உள்ளது. மின் கம்பிகள் மீது உராயும் மரக்கிளைகளை மட்டும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளின் போது மின்வாரிய ஊழியர்கள் வெட்டுவர். ஆனால், தற்போது வெட்டப்பட்டது, அத்தனையும் பெரிய மரங்களின் கிளைகளே.
ஒரு இடங்களை தவிர மற்ற பகுதிகளில் உள்ள மரங்கள் எந்த விதத்திலும் இடைஞ்சல் இல்லாமல் இருந்துள்ளது. அதனை பொறுப்பற்ற முறையில், ஆளும்கட்சி வார்டு கவுன்சிலரே முன் நின்று ஆட்களை வைத்து வெட்டியது தான் வருத்தத்திற்குரியது.
இப்படியே காரணங்களை அடுக்கி கொண்டே போனால், ஒரு காலத்தில் மரங்களே இல்லாத சூழல் ஏற்படும். அதன்பின், எப்படி மழை வரும். பசுமை சூழல் எவ்வாறு தழைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
---
விசாரணை
செய்யப்படும்
கிளைகளை வெட்டுவதற்கு மட்டும்தான் வருவாய்த் துறையினர் அனுமதி அளித்தனர். பெரிய அளவில் கிளைகள் வெட்டப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளது. இது குறித்து வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- மோகனன்
அவிநாசி தாசில்தார்
துளியும்
சம்பந்தமில்லை
மரங்களை வெட்டியதற்கும் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. எந்த விதத்திலும் பேரூராட்சி நிர்வாகம், மரங்களை வெட்டுவதற்கு அனுமதி தர முடியாது.
- தனலட்சுமி
பேரூராட்சி தலைவர்
வருவாய்த் துறையில் முறையாக அனுமதி வாங்கி வெட்டியுள்ளேன். பல வீடுகளில் வயதானவர்கள் வசித்து வருகின்றனர். கிளைகள் வீட்டின் மீது விழுந்து, அசம்பாவிதம் ஏற்படும் என்ற அச்சத்தில் தெரிவித்தார்கள். அதன்படியே மரக்கிளைகள் வெட்டப்பட்டது'' என்றார்.
- திருமுருகநாதன்
வார்டு கவுன்சிலர்
அவிநாசி பேரூராட்சி, நேரு வீதியிலும் நேற்று முன்தினம், மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டன. இதற்கு, எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை. இது, பேரூராட்சி தலைவர் தனலட்சுமியின் சொந்த வார்டு