/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நல்லது செய்தால் புண்ணியம்; பாவம் செய்தால் தண்டனை'
/
'நல்லது செய்தால் புண்ணியம்; பாவம் செய்தால் தண்டனை'
'நல்லது செய்தால் புண்ணியம்; பாவம் செய்தால் தண்டனை'
'நல்லது செய்தால் புண்ணியம்; பாவம் செய்தால் தண்டனை'
ADDED : டிச 16, 2024 10:59 PM
அவிநாசி; அவிநாசியிலுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நேற்று முதல் துவங்கியது. ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்தர்கள் பேரவை பொறுப்பாளர் ஈஸ்வரன் வரவேற்றார்.
ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:
நமக்காக எல்லாவற்றையும் எல்லா வகையிலும் இறைவன் படைத்துள்ளான். ஆனால் எதையெதை எந்தெந்த காலத்தில் எந்தெந்த அளவில் அனுபவிக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி.
பிணி, பசி, மூப்பு என அனைத்தும் கொண்டதுதான் நம் வாழ்க்கை. நம் பாவங்களை வாழும் போதே நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்பது இறைவன் நிர்ணயித்துள்ளார்.
பக்திக்கும் வேதத்திற்கும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பாகுபாடு இல்லை. நமக்கு என்ன தேவையோ அதை நம்மால் என்ன அளவில் வேண்டுமோ அதை மட்டும் பெற வேண்டும். கிடைக்கும் என்பதற்காக எதையும் அதிக அளவில் வாங்கி வைத்துக் கொள்ளக்கூடாது.
நல்லது செய்தால் புண்ணியம்; பாவம் செய்தால் தண்டனை என நாம் பிறவிலேயே அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.