/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மிஸ்டு கால்' கொடுத்தால் தி.மு.க.,வில் உறுப்பினர்
/
'மிஸ்டு கால்' கொடுத்தால் தி.மு.க.,வில் உறுப்பினர்
ADDED : ஜூலை 25, 2025 11:22 PM
திருப்பூர்; மிஸ்டு கால் கொடுத்தால் தி.மு.க.,வில் புதிய உறுப்பினராக சேர்க்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற திட்டத்தில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து, விவரங்களை பதிவு செய்து, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற மொபைல் போன் செயலியில் பதிவேற்றம் செய்து வந்தனர்.
கடந்த, 15ம் தேதி துவங் கிய இத்திட்டத்தில் பூத் வாரியாக நியமிக்கப்பட்ட குழுவினர், அனைத்து வீடுகளிலும் சென்று இப்பணியை மேற்கொண்டனர். இதில், மொபைல் போன் எண்ணில் ஓ.டி.பி., நடைமுறைக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்தது.
இதனால், இரு நாளாக புதிய நடைமுறையில் இப்பணி நடக்கிறது. ஒரு மொபைல் போன் எண்ணுக்கு தற்போது இருவர் பெயர் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகிறது. விருப்பம் தெரிவித்தால் மட்டுமே, விண்ணப்பதாரர் மொபைல் போனிலிருந்து இத்திட்டத்துக்கான 'மிஸ்டு கால்' கொடுத்து உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும்.
மிஸ்டு கால் தராத மொபைல் எண்ணில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகள் செல்லாது என்றும், கட்சி தலைமை அறிவித்துள்ளது.