/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அடியார்க்கு தொண்டு செய்தால் இறைவனே தொண்டனாவான்'
/
'அடியார்க்கு தொண்டு செய்தால் இறைவனே தொண்டனாவான்'
ADDED : டிச 23, 2024 11:21 PM
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்ப ராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஜெயமூர்த்தி பேசியதாவது:
நமக்கு தெரியாததை, நம் சிந்தனைக்கு தோன்றா ததை பிறர் கூறும்போது அது நமக்கு நன்மை நடக்கும் என்றால் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கடவுளுக்கு செய்யும் அபிஷேகம் கடவுளுக்கு மட்டுமே சேரும். அடியார்களுக்கு இயன்றதை செய்தால், இறைவனே நமக்கு தொண்டனாக இருப்பான்.
ஏதாவது ஒரு வகையில் சிறு உதவிகள் பிறருக்கு நாள்தோறும் செய்ய வேண்டும்.
தொடர் இறைபக்தியால் தடுமாறும் மனதை ஒரு நிலையில் அமைதிப்படுத்தலாம்.
பெண்களின் ஆற்றலை அளவிட முடியாது. நம் உயிரே போகும் நிலை வந்தாலும் நம்மை நம்பி கூறிய பிறரின் ரகசியத்தைக் கூறக்கூடாது. நாம் செய்யும் சிறு பிரார்த்தனைகளுக்கும் நிச்சயம் இறை பலன் உண்டு.
இறைவழிபாட்டால் அளவிட முடியாத வலிமையும் சக்தியும் ஆன்மாவிற்கு கிடைக்கும்.
முழு மனதாக இறைவன் காலடியில் பக்தியுடன் சரணடையும் ஆன்மாவிற்கு நடப்பவை எல்லாம் நன்மையே என்று கடந்து போகும்.
விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் கிடைக்கும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் வேறு எதிலும் கிடையாது.
ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் நொடிப்பொழுதும் தாமதம் செய்யாமல் அதைச் செய்து விட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.