/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இதயத்தைப் பறிகொடுத்தால் அது காதல்... இதயத்தையே பரிசளித்தால் அது நட்பு
/
இதயத்தைப் பறிகொடுத்தால் அது காதல்... இதயத்தையே பரிசளித்தால் அது நட்பு
இதயத்தைப் பறிகொடுத்தால் அது காதல்... இதயத்தையே பரிசளித்தால் அது நட்பு
இதயத்தைப் பறிகொடுத்தால் அது காதல்... இதயத்தையே பரிசளித்தால் அது நட்பு
ADDED : ஆக 04, 2024 05:18 AM

நட்பின் சிறப்பை எளிதாக உணர்த்துகிறது, இந்தக் கவிதை வரிகள். சொந்தங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது 'நண்பர்கள்' என்ற பந்தம். கை கோர்க்கும் நண்பர்களால் வாழ்வின் உச்சம் தொட்ட பலரை பார்க்க முடியும்.
நட்பு வட்டத்தை பலமாக்கி, தங்களின் வாழ்க்கையை வளமாக்கி கொண்ட பலர், இன்று நண்பர்களை கொண்டாடுகின்றனர். நட்பை போற்றும் விதமாக, ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாளில், நண்பர்கள் தினத்தை கொண்டாடி மகிழ்கின்றன. நம் நாட்டில், ஆக., மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தேசிய நட்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மையக்கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டின் தேசிய நட்பு தின மையக் கருத்து, 'எல்லை தாண்டிய நட்பை கொண்டாடுவோம்' என்பதே.
நண்பர்கள் இணைந்தால்
ஈடு இணையற்ற மகிழ்ச்சி
நந்தகுமார், நிறுவனர், ட்ரீம் 20 அமைப்பு: மொபைல் போன், இணையதளம், சமூக வலைதளம் போன்ற தகவல் பரிமாற்ற சாதனங்கள் வருவதற்கு முன், வார இறுதிநாளில் நண்பர்கள் ஒன்றிணைவோம். தற்போது நேரம் இருந்தும், வாய்ப்பு இருந்தும் கூட நேரில் சந்திக்கும் வாய்ப்பை, 'மொபைல் போன்கள்' இழக்க செய்துள்ளன. நண்பர்களுக்குள் பிணைப்பு என்கிற விஷயம், முந்தைய நாட்களை விட குறைவாகவே இருக்கிறது. மரக்கன்று நடுவது, பிளாஸ்டிக் தவிர்ப்பு, ரத்ததான முகாம் போன்ற தன்னார்வ பணிகளை செய்து வருகிறோம். இப்பணிகள் வாயிலாக நண்பர்கள் இணைகின்றனர்.அதில், கிடைக்கும் சந்தோஷத்துக்கு எதுவும் ஈடாகாது.
சமூக வலைதளங்களால்
பிணைப்பு குறையக்கூடாது
சந்தீப், மத்தியக்குழு உறுப்பினர், வேர்கள் அமைப்பு: ஒருமித்த கருத்துள்ள நண்பர்கள் இணையும் போது, அங்கு பேராற்றல் எழுகிறது. 'வேர்கள்' அமைப்பு வாயிலாக, சுற்றுச்சூழல் சார்ந்த பல பணிகளை செய்து வருகிறோம். புதிது, புதிதாக நண்பர்கள் இணையும் போது, புதிய, புதிய செயல்பாடுகளை முன்னெடுக்க முடிகிறது. கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு உதவியதில், நண்பர்களின் பங்களிப்பு அதிகம். நட்புக்குள் கருத்து வேறுபாடு வந்தாலும் மனம் விட்டு பேசுவதன் மூலம் அதை சரிப்படுத்திக் கொள்ள முடியும்; சமூக வலைதளங்களின் தாக்கத்தால், நண்பர்கள் மத்தியிலான பிணைப்பு குறைந்து விடக் கூடாது.
- இன்று தேசிய நட்பு தினம்.