ADDED : அக் 26, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: தாராபுரம் போலீஸ் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட மூலனுார் போலீஸ் ஸ்டேஷனில், கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. செந்தில்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஸ்டேஷனில் பராமரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பான ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் குற்ற வழக்கு கோப்பு என, அனைத்தையும் பார்வையிட்டார்.
கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தினர்.
குற்றங்களை தடுக்கும் வகையில் இரவு ரோந்துகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். ஸ்டேஷனுக்கு வரும் மனுதாரர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஐ.ஜி மேலும் அறிவுறுத்தினார்.

