sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

படம் 3சி முதலிபாளையத்தில் 'செயற்கை பேரிடர்' கிராம சபா கூட்டத்தில் மக்கள் கொந்தளிப்பு

/

படம் 3சி முதலிபாளையத்தில் 'செயற்கை பேரிடர்' கிராம சபா கூட்டத்தில் மக்கள் கொந்தளிப்பு

படம் 3சி முதலிபாளையத்தில் 'செயற்கை பேரிடர்' கிராம சபா கூட்டத்தில் மக்கள் கொந்தளிப்பு

படம் 3சி முதலிபாளையத்தில் 'செயற்கை பேரிடர்' கிராம சபா கூட்டத்தில் மக்கள் கொந்தளிப்பு


ADDED : நவ 01, 2025 11:27 PM

Google News

ADDED : நவ 01, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'முதலிபாளையம் பாறைக்குழியில் உள்ள கழிவுநீர், 1.20 லட்சம் 'டிடிஎஸ்,' அளவுக்கு மாசுபட்டுள்ள நிலையில், செயற்கை பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்' என, கிராம சபா கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தினர்.

திருப்பூர், முதலிபாளையம் ஊராட்சி சார்பில், சமுதாய கூடத்தில், நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற முதலிபாளையம் மக்கள், அங்குள்ள பாறைக்குழியில் தேங்கியுள்ள கழிவுநீரை பாட்டில்களில் நிரப்பி எடுத்து வந்து அதிகாரிகள் முன் வைத்தனர்.

கூட்டத்தில், பொதுமக்கள் பேசியதாவது:

முதலிபாளையம் ஊராட்சியில், மாணிக்காபுரம் - ராஜவாய்க்காலில் சாக்கடை நீர் ஓடுகிறது. முதலிபாளையம் கோவில் அருகேயுள்ள தடுப்பணையில், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஹவுசிங் யூனிட் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டிய இடத்தில் குப்பைக் கொட்டப்பட்டிருக்கிறது. இந்த பிரச்னைக்கெல்லாம் மேலாக, திருப்பூர் மாநகராட்சி சார்பில், முதலிபாளையம் பாறைக்குழியில், 10 ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை கழிவால், அங்கு தேங்கியுள்ள கழிவுநீரில், டிடிஎஸ் அளவு, லிட்டருக்கு, 1.20 லட்சம் மி.கிராம் என்ற அளவில் பெரும் மாசடைந்திருக்கிறது.

இதனால், முதலிபாளையம் பகுதியில் உள்ள மொத்த நிலப்பரப்பில், மூன்றில் இரண்டு பகுதி நிலம் மாசுபட்டிருக்கிறது. இப்பிரச்னையை செயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும். பாறைக்குழியை சுத்தப்படுத்திவிட்டு, கிராம சபை நடத்த வேண்டும்; அதுவரை ரத்து செய்ய வேண்டும். ஐகோர்ட் வழிகாட்டுதல் படி பாறைக்குழியில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அப்புறப்படுத்த வேண்டும்; அதுவரை, குப்பையை மூடி வைக்க வேண்டும். குப்பையில் இருந்து வெளியேறி, பெரும் மாசு ஏற்படுத்தியுள்ள கழிவுநீரை, சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். வரும் நாட்களில், அங்கு குப்பை கொட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஏறத்தாழ, 2 மணி நேரம் நடந்த கூட்டத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசிய அதிகாரிகள், கிராம சபா கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தனர். 'இந்த ஒத்திவைப்பு அறிவிப்பை, கிராம சபா ரத்து செய்யப்படுவதாகவே எடுத்துக் கொள்வோம்' என, முதலிபாளையம் மக்கள் கூறியதை தொடர்ந்து, மக்கள் கலைந்தனர். கடந்த, 7ம் தேதி நடந்த கிராம சபையும், இதே பிரச்னையை முன்வைத்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாநகராட்சி சார்பில், முதலிபாளையம் பாறைக்குழியில், 10 ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை கழிவால், அங்கு தேங்கியுள்ள கழிவுநீரில், டிடிஎஸ் அளவு, லிட்டருக்கு, 1.20 லட்சம் மி.கிராம் என்ற அளவில் பெரும் மாசடைந்திருக்கிறது


ஏன் இந்த மெத்தனம்? பாறைக்குழியில் குப்பை கொட்டக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த, 2015ல் சிலர், பசுமை தீர்ப்பாயத்தில், மாநகராட்சிக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். 'விதிமுறைக்கு உட்பட்டு, தேவையான சுகாதார முன்னேற்பாடுகளுடன் தான் குப்பை கொட்டப்படுகிறது' என்ற விளக்கத்தை முன்வைத்தே, மாநகராட்சி நிர்வாகம் முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்ட துவங்கியிருக்கிறது. கடந்த, 2019ல் பாறைக்குழியில் தேங்கியுள்ள நீரை, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஒரு லிட்டர் நீரில் கலந்துள்ள 'டிடிஎஸ்.,' அளவு, 89 ஆயிரம் மி.கிராம் என்பது தெரிய வந்திருக்கிறது.அப்போதே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், திருப்பூர் மாநகராட்சியும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்; ஆனால், கவனம் செலுத்தவில்லை. ஏன் இந்த மெத்தனம்? - பொதுமக்கள் முதலிபாளையம்








      Dinamalar
      Follow us