/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடனடி வரி வசூல்; உள்ளாட்சிகள் திணறல்
/
உடனடி வரி வசூல்; உள்ளாட்சிகள் திணறல்
ADDED : டிச 03, 2024 11:50 PM
திருப்பூர்; நகர்ப்புற உள்ளாட்சிகளில் இம்மாத இறுதிக்குள், 75 முதல், 100 சதவீதம் வரி வசூலை நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி நிர்வாகங்களின் வரி வருவாயை பெருக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள், முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டு என பிரிக்கப்பட்டு, ஏப்., மற்றும் செப்., மாத இறுதிக்குள் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், இம்மாதம் (டிச.,) இறுதிக்குள், 75 முதல், 100 சதவீதம் வரி வசூலை செய்து முடிக்க வேண்டும் என, அந்தந்த துறை இயக்குனரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தினர், வாகன பிரசாரம் வாயிலாகவும், தனிப்பட்ட முறையிலும், பொதுமக்கள் மத்தியில் வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
குறிப்பிட்ட தேதிக்குள் வரி செலுத்தாத வீடு உள்ளிட்ட கட்டடங்களின் குடிநீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் நடப்பாண்டு இறுதியில், அதாவது, மார்ச் - ஏப்., மாத இறுதிக்குள் தான், மக்கள் வரியினங்களை செலுத்தி பழகிவிட்ட நிலையில், வரி வசூலில் இலக்கை எட்ட முடியாமல் திணறுகின்றனர்.