/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் எதிர் திசையில் இயக்குவதால் பாதிப்பு
/
ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் எதிர் திசையில் இயக்குவதால் பாதிப்பு
ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் எதிர் திசையில் இயக்குவதால் பாதிப்பு
ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் எதிர் திசையில் இயக்குவதால் பாதிப்பு
ADDED : ஜன 29, 2024 11:15 PM
உடுமலை;நகரில், ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் அதிகரிக்கிறது.
சாலை விபத்துகளைக் குறைக்கவே, பஸ், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சாலைகளின் அகலம் மற்றும் தரத்தை மதிப்பீடு செய்து, அங்கும் வாகனங்கள் செல்லும் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. இருப்பினும், உடுமலை நகரில், சாலையின் அகலம், தரத்தை மறந்து, வாகன ஓட்டுநர்கள், சில நேரங்களில், அதிவேகமாக வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
குறிப்பாக, முக்கிய சாலை சந்திப்புகளான மத்திய பஸ் ஸ்டாண்ட் ஒட்டிய பகுதி, தளி ரோடு, பழநி ரோடு உள்ளிட்ட சாலைகளில், ஒரு வழிப்பாதையில், எதிராக வாகனங்களை அதிவேகமாக இயக்கி வருகின்றனர்.
இதனால், ரோட்டை கடந்து செல்லவும், நடக்கவும் முற்படும் பாதசாரிகள், அச்சுறுத்தலுக்கு உள்ளாகுகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: நகரின் பெரும்பகுதி, நகரச்சாலைகளை உள்ளடக்கி நேர்கோட்டில் அமைந்துள்ளது. அதனால், வாகன ஓட்டுநர்கள் அதிகவேகமாக வாகனங்களை இயக்குகின்றனர்.
தற்போது, ஒரு வழிப்பாதையில், எதிரான திசையில் வாகனங்கள் இயக்குவதை சிலர் வாடிக்கையாகக்கொண்டுள்ளனர். குறிப்பாக, டூ வீலர் இயக்கப்படுகிறது. பாதசாரிகள் மீது மோதி விபத்தும் ஏற்படுகிறது. இத்தகைய விதிமீறலை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.