/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எண்ணெய்க்கு இறக்குமதி வரி; விவசாய சங்கம் வரவேற்பு
/
எண்ணெய்க்கு இறக்குமதி வரி; விவசாய சங்கம் வரவேற்பு
ADDED : செப் 20, 2024 05:44 AM

பல்லடம் : கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு, 20 சதவீதமாக உயர்த்தி உள்ளதை வரவேற்கிறோம். இதனால், இந்தோனேஷியா - மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் விற்பனையும் குறையும் என எதிர்பார்க்கிறோம்.
காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமலும், தண்ணீர் தட்டுப்பாடு, ஆள் பற்றாக்குறையால், பெரும்பாலான விவசாயிகள் தென்னை விவசாயத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது, தேங்காய்க்கும் விலை கிடைக்காமல் விவசாயிகள் அவ்வப்போது திண்டாட வேண்டி உள்ளது. எனவே, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.
சோதனை அடிப்படையில், சில மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்படும் என தெரிவித்து நான்கு மாதங்களாகிறது. ஆனால், செய்யவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசு கேள்விக்குறியாக்கி வருகிறது. எனவே, விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.