நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், 32; தொழிலாளி. இவர் கடந்த, 2018 ம் ஆண்டு டூவீலரில் கூலிபாளையம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த சந்தோஷ், 30 சென்ற டூவீலர் மீது விபத்துக்குள்ளானது. அதில், சந்தோஷ் இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரித்தனர்.
இவ்வழக்கு விசாரணை ஊத்துக்குளி ஜே.எம்., கோர்ட்டில் நடந்தது. விபத்து ஏற்படுத்திய சிலம்பரசனுக்கு, 2 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சிலம்பரசன், திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர், ஊத்துக்குளி கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விவேகானந்தன் ஆஜராகி வாதாடினார்.

