/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனாம் நில விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்
/
இனாம் நில விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 16, 2025 12:21 AM
திருப்பூர்: கோவில் இனாம் நில விவகாரத்தில் புதிய சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, இன்று குப்புச்சிபாளையத்தில் விவசாயிகள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார், அல்லாளபுரம் பகுதியில் ஏறத்தாழ 650 ஏக்கர் விவசாய நிலங்களை பூஜ்ஜிய மதிப்பீடு செய்து, அவை கோவில் நிலங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் ஏறத்தாழ, 100 ஆண்டாக பயன்பாட்டில் உள்ளன. அவற்றுக்கு பட்டாவும், சில நிலங்களுக்கு பத்திரங்களும் உள்ளன.
இந்நிலையில், அவற்றை கோவில் நிலம் என்று அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் இனாம் நில விவகாரத்தில் புதிய சட்டம் உருவாக்கி இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, இன்று குப்புச்சிபாளையம் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், இனாம் நில விவசாயிகள், குத்தகைதாரர்கள், வீட்டு மனை உரிமையாளர்கள் இயக்கம் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தராத அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டோம் என அவர்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

