/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பார்'-ல் தகராறு; பா.ஜ. பிரமுகர் கைது
/
'பார்'-ல் தகராறு; பா.ஜ. பிரமுகர் கைது
ADDED : நவ 16, 2025 12:22 AM
திருப்பூர்: காங்கயம், ஊதியூர், மேட்டுப்பாறையில் டாஸ்மாக் மதுக்கடை பார் செயல்பட்டு வருகிறது. பார் செயல்படும் இடம், பா.ஜ. தெற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமாரின் இடம். பாரை, திருப்பூரை சேர்ந்த அழகர்சாமி என்பவர் வாடகைக்கு நடத்தி வருகிறார். வாடகை தொடர்பாக, விஜயகுமார், அழகர்சாமியிடம் பிரச்னை ஏற்பட்டது.
இரு நாட்கள் முன், விஜயகுமார் உள்ளிட்ட சிலர், பாருக்குள் நுழைந்து, வேலை செய்தவர்களை கட்டையால் தாக்கினர். அதில், கார்த்திக், கருப்புசாமி, பெத்தசாமி, ஆனந்த் ஆகியோர் காயமடைந்தனர்.
அனைவரும் தப்பி சென்றனர். காயமடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தகராறில் ஈடுபட்ட ஊதியூரை சேர்ந்த சுரேஷ், மனோஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இச்சூழலில், தலைமறைவான விஜயகுமாரை போலீசார் தேடி வந்தனர். அவர் பெங்களூரில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்து அழைத்து வருகின்றனர்.

