/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
/
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
ADDED : மார் 20, 2024 12:09 AM
திருப்பூர்;சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்புவோர் குறித்து புகார் அளிக்க, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், எட்டுசட்டசபை தொகுதிகளில், உரிய ஆவணமின்றி பணம், பரிசுப்பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதை கண்காணித்து, தடுப்பதற்காக, 24 பறக்கும்படை; 24 நிலை கண்காணிப்புக்குழுக்கள், 24 மணி நேரமும் சுழன்று வருகின்றன.
தேர்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளையும் கண்காணிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறும்வகையிலான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபிநபு கூறியதாவது:
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர்அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
குறுஞ்செய்தி மூலமாகவோ, சமூக வலைதளங்களிலோ, தேர்தல் நடத்தை விதிகளை மீறும்வகையிலான தகவல்கள் பகிரப்படுவது குறித்து தகவல்களை, 63834 35135 என்கிற எண்ணில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

