/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் திறப்பு
/
ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் திறப்பு
ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் திறப்பு
ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் திறப்பு
ADDED : ஆக 26, 2025 06:24 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம் உருவான பின், தொழிலாளர் துறை அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகின்றன. சமூகபாதுகாப்பு திட்ட உதவி கமிஷனர் அலுவலகம் மட்டும், பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் அருகே, வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக, ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டுமான பணி நடந்து வந்தது.
தொழிலாளர் துறை சார்பில், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம், அவிநாசி ரோடு, குமார் நகர் அருகே கட்டப்பட்டது. தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன், 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில், பொதுமக்கள் காத்திருப்பு அறை, முத்திரை ஆய்வாளர் அறை, ஆய்வகம், முத்திரையிடும் அற மற்றும் பதிவறை அமைய உள்ளது.
முதல் தளத்தில், தொழிலாளர் துறை உதவி கமிஷனர் ( அமலாக்கம்), அறை, அலுவலக அறை, தொழிலாளர் உதவி கமிஷனர் (சமரசம்) அறை, அலுவலக அறை, இரண்டாவது தளத்தில், தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அறை, பதிவறை, கருத்தரங்கு அறை, நீதிமன்ற அறை ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.