sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்பாக்ஸ்: எடுபடாத எச்சரிக்கை; விடுபடாத அபாயம்  

/

இன்பாக்ஸ்: எடுபடாத எச்சரிக்கை; விடுபடாத அபாயம்  

இன்பாக்ஸ்: எடுபடாத எச்சரிக்கை; விடுபடாத அபாயம்  

இன்பாக்ஸ்: எடுபடாத எச்சரிக்கை; விடுபடாத அபாயம்  


ADDED : டிச 09, 2024 11:46 PM

Google News

ADDED : டிச 09, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொசுத்தொல்லை

குருவாயூரப்பன் நகரில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கொசு மருந்து அடிக்க வேண்டும்.

- பழனிசாமி, குருவாயூரப்பன் நகர்.

கால்வாய் அடைப்பு

அவிநாசி ரோடு, டீச்சர்ஸ் காலனி மூன்றாவது வீதியில், சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய் முழுதும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. சுத்தம் செய்ய வேண்டும்.

- பாபு, டீச்சர்ஸ் காலனி.

கழிவுநீர் தேக்கம்

பலவஞ்சிபாளையம் பஸ் ஸ்டாப் முன், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.

- மீனாட்சிசுந்தரம், பலவஞ்சிபாளையம். (படம் உண்டு)

அபாய மின் கம்பம்

லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனியில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து, விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.

- முத்துக்குமார், லட்சுமி நகர். (படம் உண்டு)

எச்சரித்தும் பயனில்லை

அவிநாசி ரோடு, பத்மாவதிபுரத்தில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்தும், சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.

- அசோக்குமார், பத்மாவதிபுரம். (படம் உண்டு)

மண்டிய புதர்

திருப்பூர், 13வது வார்டு, காந்தி நகர், 80 அடி ரோட்டில் மின்கம்பங்களை சுற்றிலும் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி, கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே தொங்கிய நிலையில் உள்ளது.

- சிவசுப்ரமணியன், காந்தி நகர். (படம் உண்டு)

பல்லாங்குழி சாலை

அங்கேரிபாளையம் - வெங்கமேடு மாதேஸ்வரன் கோவில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வழிநெடுக குழியால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.

- மனோகரன், வெங்கமேடு. (படம் உண்டு)

நாய்த் தொல்லை

செங்குந்தபுரம் முதல் வீதி, நுகர்வோர் கோர்ட் எதிர்புற வீதியில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.

- அருண், செங்குந்தபுரம். (படம் உண்டு)

காத்திருக்கும் ஆபத்து

ெஷரீப் காலனி, சித்தி விநாயகர் கோவில் முன்புறம் குடிநீர் கேட்வால்வு மூடாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. பாதசாரிகள், வாகனஓட்டிகள் விழுந்து விடும் அபாயம் உள்ளது.

- ஹரிஷ் சிவம், ெஷரீப் காலனி. (படம் உண்டு)

சாலை சீராகுமா?

திருமுருகன்பூண்டி ரிங் ரோடு, ராகு - கேது கோவில் அருகே, வேகத்தடையை ஒட்டி சாலை குழியாக உள்ளது. புதிதாக வருவோர் திடீரென தடுமாறுகின்றனர். குழியை மூடி சாலையை சீரமைக்க வேண்டும்.

- விஜி, கூட்டுறவு நகர். (படம் உண்டு)

ரியாக் ஷன்

ஒளிர்கிறது விளக்கு

திருப்பூர் வடக்கு, எம்.எஸ்., நகர் இரண்டாவது வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. சரிசெய்யப்பட்டு தெருவிளக்கு பளிச்சிடுகிறது.

- ராஜேந்திரன், பத்மினி கார்டன். (படம் உண்டு)

சாலை சீரமைப்பு

மண்ணரை, சத்யா காலனியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

- பிரவீனா, சத்யா காலனி. (படம் உண்டு)






      Dinamalar
      Follow us