தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்பாக்ஸ் மழைநீர் தேக்கம்; சாலை ‘காலி’

இன்பாக்ஸ் மழைநீர் தேக்கம்; சாலை ‘காலி’

இன்பாக்ஸ் மழைநீர் தேக்கம்; சாலை ‘காலி’


ADDED : செப் 27, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குப்பை தேக்கம்

கல்லாங்காடு கிழக்கு, கிருஷ்ணா நகர்–முத்து நகர் வழியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளியில் வீசப்படுகின்றன.

– ராமலிங்கம், முத்து நகர். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், பழைய சக்தி தியேட்டர் ரோடு, இந்திரா ஸ்கூல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது.

– மகேந்திரன், பி.என். ரோடு. (படம் உண்டு)

திறந்த கால்வாய்

அவிநாசி, ராயம்பாளையம், திருப்பூர் ரோடு ரவுண்டானா எதிரில் கால்வாய் மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. குறுகிய சாலையில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அபாயம் உள்ளது.

– மதன்சுரேஷ், ராயம்பாளையம். (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

தெக்கலுார் உயர்நிலைப்பள்ளி வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

– நந்தகுமார், தெக்கலுார். (படம் உண்டு)

மூடப்படாத குழி

பல்லடம்–திருப்பூர் ரோடு, அருள்புரம் பஸ் ஸ்டாப் அருகில் குடிநீர் குழாய் கேட்வால்வு பழுதாகி தண்ணீர் தேங்கியுள்ளது. பழுதை சரிசெய்ய குழி தோண்டிய நிலையில், அதை மூடாமல் விட்டுள்ளனர்.

– முத்துக்குமாரசாமி, அருள்புரம். (படம் உண்டு)

கழிவுநீர் வழிகிறது

திருப்பூர், காசிபாளையம் பஸ் ஸ்டாப்பில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

– ரமேஷ், காசிபாளையம். (படம் உண்டு)

பல்லாங்குழி சாலை

15 வேலம்பாளையம்–காவிலிபாளையம் ரோட்டில் மழைநீர் தேங்கி, சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது. புதிய சாலை அமைக்க வேண்டும்.

– குழந்தைவேலு, 15 வேலம்பாளையம். (படம் உண்டு)

எரியாத விளக்கு

அங்கேரிபாளையம், சிங்காரவேலன் நகரில் இரு வாரங்களாக தெருவிளக்கு எரியவில்லை. பழுதான விளக்கை மாற்றி, புதிய விளக்கு பொருத்த வேண்டும்.

– சிவா, சிங்காரவேலன் நகர். (படம் உண்டு)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us