UPDATED : செப் 27, 2026 06:59 PM
ADDED : செப் 27, 2026 06:42 PM
ஆன்மிகம்
பொங்கல் விழா
ஸ்ரீ சேற்று மாரியம்மன் கோவில், தெக்கலுார், அவிநாசி. பூவோடு எடுத்தல் - காலை 6:30 மணி. இளநீர் காவடி எடுத்து வருதல் - மாலை 6:00 மணி. கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு 8:30 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
மண்டல பூஜை
* ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், கணபதிபாளையம், பல்லடம். காலை 6:30 மணி.
* ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் கோவில், கரைப்புதுார், பல்லடம். காலை 6:00 மணி.
* கரியகாளியம்மன் கோவில், பரஞ்சேர்வழி, காங்கயம். அபிேஷகம் - காலை 10:15 மணி. தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி.
பொது
குறைகேட்பு கூட்டம்
இ.எஸ்.ஐ. உறுப்பினர்களுக்கான குறைகேட்பு கூட்டம், எஸ்.என்.க்யூ.எஸ். இன்டர்நேஷனல் நிறுவனம், சுண்டக்காம்பாளையம், அவிநாசி. ஏற்பாடு: தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் ஊழியர் மாநில காப்பீடு கழகம். காலை 10:30 மணி.
மகாசபை கூட்டம்
ஐந்தாவது மகாசபை கூட்டம், மூர்த்தி மெஸ், யூனியன் மில்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ரன்னர்ஸ் கிளப். மாலை 6:00 மணி.
தேர்தல் பிரசாரம்
* தாராபுரம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து, தி.மு.க. துணை பொது செயலாளர், எம்.பி. கனிமொழி பிரசாரம், மானுார்பாளையம், குண்டடம் மேற்கு ஒன்றியம் - மாலை 5:00 மணி, கோவிந்தபுரம், தாராபுரம் மேற்கு - மாலை 6:00 மணி, மணக்கடவு, தாராபுரம் கிழக்கு - இரவு 7:00 மணி. கிளாங்குண்டல், மூலனுார் மேற்கு - இரவு 8:00 மணி.
* தாராபுரம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து, அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி பிரசாரம், குண்டடம் - மாலை 4:00 மணி. மானுார்பாளையம் - மாலை 5:00 மணி. உப்பாறு மூணு ரோடு - மாலை 6:00 மணி. பொன்னாபுரம் - இரவு 7:00 மணி.
ஆலோசனை கூட்டம்
கிராப்ட் பேப்பர் விலை அசாதாரண அதிகரிப்பு தொடர்பாக விவாதிப்பதற்கான ஆலோசனை கூட்டம், பாப்பீஸ் ஓட்டல், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம். மதியம் 3:30 மணி.
விழிப்புணர்வு கருத்தரங்கம்
உலக ரேபிஸ் தின விழிப்புணர்வு கருத்தரங்கம், குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.
சிறப்பு முகாம்
நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர். கரட்டுப்பாளையம், அன்னாள் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் துாய்மை பணி - காலை 10:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
விளையாட்டு
முதல்வர் கோப்பை தடகள போட்டி
அனைத்து பிரிவு வீரர், வீராங்கனைகளுக்கு தடகள போட்டி, எஸ்.டி.ஏ.டி. மைதானம், சிக்கண்ணா கல்லுாரி வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
