/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு திட்ட பணிக்கு ஊக்கத்தொகை
/
சிறப்பு திட்ட பணிக்கு ஊக்கத்தொகை
ADDED : பிப் 03, 2024 11:44 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாக குழு கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ், துணை செயலாளர்கள் முருகன், கருப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்று விவாதித்தனர். ரேஷன் கடை பணியாளர்களிடம் பிடித்தம் செய்த, பி.எப்., கணக்கு நிதியை, கணக்கில் செலுத்த வேண்டும்.
ரேஷன் பொருட்களின் எடை குறையாமல் இருக்க, நல்ல சாக்குப்பைகளில் அனுப்ப வேண்டும். அனைத்து பொருட்களும், காலதாமதமின்றி ஒரே முறையில் அனுப்ப வேண்டும். தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
கடைகளில் தேங்கியுள்ள காலி சாக்கு பைகளை உடனடியாக எடுக்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசு திட்ட பணிகளை செய்த பணியாளருக்கு, ஒரு கார்டுக்கு ஐந்து ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
கூடுதல் பணியாளர் நியமனமாக, நியமிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.