/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொசு உற்பத்தி அதிகரிப்பு : நோய் பரவும் அபாயம்
/
கொசு உற்பத்தி அதிகரிப்பு : நோய் பரவும் அபாயம்
ADDED : அக் 29, 2025 11:42 PM
உடுமலை: குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீர் தேங்கி நின்று கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால், நோய் பரவும் அபாயம் உள்ளதாக கொங்கல்நகரம் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரம் ஊராட்சி குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகிக்க, ஒன்றிய பொது நிதியில், நிலத்தடி நீர்த்தேக்க கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த தொட்டிக்கு திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக தண்ணீர் வழங்கப்படுகிறது.
நாள்தோறும் இத்தொட்டி நிறைந்து அதிகளவு தண்ணீர் வீணாகிறது. வீணாகும் தண்ணீர் அப்பகுதியில் பல நாட்களாக தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
நன்னீரில் உருவாகும் கொசுக்களால், டெங்கு உள்ளிட்ட நோய்த்தாக்குதல் ஏற்படும் வாய்ப்புள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

