/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்ளாட்சி தினம் நவ. 1ல் கிராம சபா
/
உள்ளாட்சி தினம் நவ. 1ல் கிராம சபா
ADDED : அக் 29, 2025 11:42 PM
உடுமலை: உள்ளாட்சி தினமான வரும் நவ., 1ம் தேதி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளில், கிராமசபா கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம், துாய்மை பாரத இயக்கம் தொடர்பாக விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. காலை, 11:00 மணி முதல் கிராமசபா நடைபெறும்.
ஒன்றிய அலுவலகங்கள் வாயிலாக பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், ஊராட்சியின் வளர்ச்சி தொடர்பான ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

