/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனிப்பொழிவு அதிகரிப்பு; நடைபயிற்சி தவிர்ப்பு
/
பனிப்பொழிவு அதிகரிப்பு; நடைபயிற்சி தவிர்ப்பு
ADDED : பிப் 07, 2025 08:45 PM

உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதியில், காலையில் மக்கள் வெளியில் செல்ல முடியாத வகையில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.
கார்த்திகை, மார்கழி மாதம் பனிப்பொழிவு இருப்பது வழக்கமான பருவமாக உள்ளது. நடப்பாண்டில், கடந்த இரண்டு மாதங்களில் மழையின் தாக்கமும் அதிகம் இருந்தது. இதனால் பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டது.
தற்போது அதன் இருமடங்காக பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. உடுமலை சுற்றுப்பகுதியில் காலை, 10:00 மணி வரையிலும் ரோடுகளில் புகைமூட்டமாக பனிப்பொழிவை காண முடிகிறது.
காலை நேரங்களில், பல்வேறு தேவைகளுக்கு வெளியில் செல்லும் வாகன ஓட்டுனர்கள், எதிரில் வாகனங்கள் வருவதையும் காண முடியாத வகையில் பனிப்பொழிவு உள்ளது.
பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கும் அச்சப்பட்டு வெளியில் வருவதை தவிர்த்து விடுகின்றனர். மேலும் இதன் விளைவு, பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.