/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பதின்ம வயது கர்ப்பம் அதிகரிப்பு; பதற வைக்கும் நிஜம்
/
பதின்ம வயது கர்ப்பம் அதிகரிப்பு; பதற வைக்கும் நிஜம்
பதின்ம வயது கர்ப்பம் அதிகரிப்பு; பதற வைக்கும் நிஜம்
பதின்ம வயது கர்ப்பம் அதிகரிப்பு; பதற வைக்கும் நிஜம்
ADDED : டிச 26, 2024 11:50 PM

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஏப்., முதல் டிச., மாதம் வரை, இதுவரை 790 பதின்ம வயதினர்(டீன் ஏஜ்) கர்ப்பம் தரித்துள்ளனர்; இது, முந்தைய நிதியாண்டைவிட, 14.32 சதவீதம் அதிகம்.
திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியர், 'டீன் ஏஜ்' பருவத்திலேயே, கர்ப்பமாவது அதிகரித்துவருகிறது. நடப்பு 2024 - 25ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை, 120 குழந்தை திருமண புகார்கள் பதிவாகியுள்ளன; இவற்றில், 54 திருமணங்கள், அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், 137 குழந்தை திருமணம் புகார்கள் பதிவாகியிருந்த நிலையில், 110 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
முந்தைய நிதியாண்டில் புகார் பதிவானவற்றில், 80.29 சதவீத குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த முடிந்துள்ளது. ஆனால் நடப்பு நிதியாண்டில், 45 சதவீத திருமணங்களை மட்டுமே த டுக்க முடிந்திருக்கிறது. பெற்றோர், உறவினர் ஏற்பாட்டில் நடைபெறும் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதே இதற்கு காரணம்.
அதிர்ச்சி தந்த புள்ளிவிவரம்
மாவட்டத்தில் கடந்த நிதியாண்டைவிட நடப்பு நிதியாண்டில் பதின்ம வயது சிறுமியர் கர்ப்பம் அதிகரித்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த நிதியாண்டில், மாவட்டத்தில் மொத்தம் 691 பதின்ம வயது கர்ப்பம் பதிவாகியிருந்தது. நடப்பு நிதியாண்டிலோ ஒன்பது மாதங்களிலேயே இந்த எண்ணிக்கை, 790 ஆக, 14.32 சதவீதம் அதிகரித்துள்ளது.
பதின்ம வயதினர் கர்ப்பத்தில், புலம் பெயரும் தொழிலாளர் அதிகம் வசிக்கும் திருப்பூர் வட்டாரம் முன்னிலையில் உள்ளது. கடந்த நிதியாண்டில் 151 ஆக இருந்த எண்ணிக்கை, நடப்பு நிதியாண்டில் 320 ஆக உயர்ந்துள்ளது. பல்லடத்தில், 75; உடுமலையில், 63; அவிநாசியில், 61; மடத்துக்குளத்தில், 49; தாராபுரத்தில், 48; ஊத்துக்குளியில் 34; பொங்கலுாரில் 34; காங்கயத்தில் 30; வெள்ளகோவிலில், 30; குடிமங்கலத்தில் 24; குண்டடத்தில் 13; மூலனுாரில் ஒன்பது பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன.