/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுத் தேர்வு மைய எண்ணிக்கை அதிகரிப்பு
/
பொதுத் தேர்வு மைய எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : பிப் 15, 2025 07:20 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு மையங்கள் எண்ணிக்கை தலா ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வுக்கு கடந்த கல்வியாண்டு, 92 தேர்வு மையங்கள் இருந்தது. நடப்பு ஆண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், கூடுதல் மையம் அமைக்க கேட்டு, பள்ளிகள் விண்ணப்பித்துள்ளன.
அதன்படி, ஊத்துக்குளி தாலுாகாவில் உள்ள, வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளி, 2025ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் மையங்களின் எண்ணிக்கை, 93 ஆக உயர்ந்துள்ளது.
பத்தாம் வகுப்புக்கு, இதுவரை, 108 மையங்களில் பொதுத்தேர்வு நடந்து வந்தது; நடப்பாண்டு முதல் என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி புதிய தேர்வு மையமாக சேர்க்கப்பட்டுள்ளதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் மையங்களின் எண்ணிக்கை, 109 ஆக உயர்ந்துள்ளது.
தேர்வு நடக்கும் மையங்களில் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஒரிரு நாட்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் தலைமையில் கல்வி அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர்.

