/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; வடகிழக்கு பருவ மழை தீவிரம்
/
குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; வடகிழக்கு பருவ மழை தீவிரம்
குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; வடகிழக்கு பருவ மழை தீவிரம்
குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; வடகிழக்கு பருவ மழை தீவிரம்
ADDED : அக் 18, 2024 10:36 PM

உடுமலை : உடுமலை பகுதிகளில் பெய்த கன மழையால், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
திருமூர்த்தி அணை, பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனம், தளி கால்வாய் வாயிலாக, ஏழு குளங்கள் மற்றும் வலையபாளையம், பூசாரி நாயக்கன் குளம் பாசன வசதி பெற்று வருகின்றன.
இக்குளங்கள் வாயிலாக, 2,786 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெற்று வருவதோடு, சுற்றுப்புற கிராமங்களிலுள்ள, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் கிணறு, போர்வெல் என விவசாய நிலங்களுக்கான நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளன.
ஏழு குளம் பாசனத்திற்கு, கடந்த, ஆக.,18 முதல் நீர் வழங்கப்பட்டு வருகிறது. பூசாரிநாயக்கன் குளத்திற்கு மூன்று நாட்கள் நீர் வழங்கப்பட்டது. இதனால், இக்குளங்களின் நீர் மட்டம் உயர்ந்தது.
இந்நிலையில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் வட கிழக்கு பருவ மழையும் தீவிரமடைந்து, இயல்பை விட மழை பொழிவு அதிகரித்துள்ளது.
இதனால், கிராமங்களிலுள்ள குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஓடைகள் மற்றும் தடுப்பணைகளுக்கும் மழை நீர் வந்ததால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.