/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகரித்த பனி மூட்டம்; அவதிப்படும் மக்கள்
/
அதிகரித்த பனி மூட்டம்; அவதிப்படும் மக்கள்
ADDED : ஜன 19, 2024 04:28 AM
திருப்பூர் : மார்கழி முடிந்தும், பனியின் தாக்கம் குறையாததால், நள்ளிரவு, அதிகாலையில் பயணிப்போர் 'ஸ்வெட்டர்', ரெயின்கோர்ட் சகிதமாக காணப்படுகின்றனர்.
டிச., மூன்றாவது வாரம், மார்கழி பிறந்த போது, லேசான மழை பெய்து வந்தது. குறிப்பாக, தினசரி துாறல் மழை பெய்ததால், பனியின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. ஆனால், ஆங்கில புத்தாண்டு பிறப்புக்கு பின், மழை குறைந்து, பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக, திருப்பூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெயில் தலைகாட்டாமல், காலை, 10:00 மணி வரை பனிசூழ்ந்த சூழலே நிலவுகிறது. அதிகாலை, 5:00 மணிக்கு மூடுபனி பெய்கிறது. கடந்த, 14ம் தேதி போகி பண்டிகையுடன், மார்கழி நிறைவுற்றது.
'தை மாதம் தலை நடுங்கும்' என்று சொல்வதற்கு ஏற்றவாறு பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வருவோர், பயணிப்போர் ஸ்வெட்டர், ரெயின்கோர்ட் சகிதமாக காணப்படுகின்றனர்.
திருப்பூர் வந்து செல்லும் ரயில், பஸ்களில் ஜன்னல் கதவுகள் பயணிகள் நெரிசல் இருந்தாலும், மூடியே காணப்படுகிறது. புல்வெளிகளில் ஈரம் மதியம் வரை படர்ந்தே உள்ளது.

