sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இளைஞர்களிடம் பா.ஜ.வுக்கு அதிகரித்த ஆதரவு; திருப்பூர் திரும்பிய பீஹார் தொழிலாளர்கள் பேட்டி

/

 இளைஞர்களிடம் பா.ஜ.வுக்கு அதிகரித்த ஆதரவு; திருப்பூர் திரும்பிய பீஹார் தொழிலாளர்கள் பேட்டி

 இளைஞர்களிடம் பா.ஜ.வுக்கு அதிகரித்த ஆதரவு; திருப்பூர் திரும்பிய பீஹார் தொழிலாளர்கள் பேட்டி

 இளைஞர்களிடம் பா.ஜ.வுக்கு அதிகரித்த ஆதரவு; திருப்பூர் திரும்பிய பீஹார் தொழிலாளர்கள் பேட்டி


ADDED : நவ 16, 2025 01:01 AM

Google News

ADDED : நவ 16, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'பீஹாரில், இளைஞர்கள் மத்தியில் பா.ஜ. கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. தேர்தலில் பா.ஜ. வெற்றி எங்களை உற்சாகப்படுத்தி உள்ளது,' என்று திருப்பூர் திரும்பிய பீஹார் தொழிலாளர்கள் கூறினர்.

திருப்பூர் பனியன் தொழிலில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்களில் முக்கியமானவர்கள் பீஹார் தொழிலாளர்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக, பீஹார் தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர்.

திருமணமான பின், திருப்பூர்வாசிகளாக மாறிவிட்டனர். தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வாங்கிய பீஹாரை சேர்ந்த தொழிலாளர்கள், 'சாத ் ' பண்டிகைக்காக, சொந்த ஊருக்கு சென்றனர். பண்டிகை முடிந்த சில நாட்களிலேயே தேர்தல் துவங்கி விடும் என்பதால், ஓட்டளித்த பின்னரே, திருப்பூர் திரும்புவோம் என்று கூறி சென்றனர்.

அவ்வாறே பீஹார் சட்டசபை தேர்தல் முடிந்து, 14ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஆளும் பா.ஜ. கூட்டணியே மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளது.

சொந்த மாநில தேர்தலுக்காக சென்றிருந்த தொழிலாளர்கள், நேற்று முதல் திருப்பூர் திரும்பி வரத்து வங்கிவிட்டனர்.

திருப்பூருக்கு நேற்று பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பீஹாரிகள், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே வந்ததும், சக தொழிலாளர்களை பார்த்து, 'தங்கள் தொகுதியில் ஓட்டுப்பதிவு செய்ததை நினைவுகூறும் வகையில், மை வைத்த விரலை காண்பித்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

திருப்பூரில் பணிபுரியும் பீஹார் மாநிலம், சீதாமரி மாவட்டம், பரிகார் தொகுதியை சேர்ந்த பனியன் தொழிலாளர்கள் பகிர்ந்த கருத்துகள்:

நல்லவர்களின் ஆட்சி ஜிதேந்திரகுமார், 26: பரிகார் தொகுதியில், பா.ஜ., கூட்டணிக்கு தான் ஓட்டு போட்டேன். எந்த இலவசத்துக்கும் நாங்கள் ஏங்கவில்லை. எங்கள் உழைப்பை மட்டுமே நாங்கள் நம்புகிறோம். எங்கள் ஊரை நல்லவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தோம்.

அவர்கள் நன்றாக ஆட்சி செய்கின்றனர். அந்த ஆட்சி தான் தொடர வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு பா.ஜ. மிகவும் அவசியம் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்.

நம்பிக்கைக்கு உரியவர்கள் விஸ்வாஸ் குமார், 26: எங்கள் ஊர் முன்னேற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு நல்லது செய்ய நினைப்போரை தேர்வு செய்துள்ளோம். எங்கள் நம்பிக்கை வீண் போகாது. கடவுள் மீது பயமும், பக்தியும் கொண்டவர்கள் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள்.

அந்த வகையில் எங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களை எங்கள் மக்கள் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள். எங்களுக்கு என்ன தேவையோ அதை செய்வார்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன்.

இருள் அகன்றது விஸ்வநாத் ஷா, 42: எங்கள் கிராமத்திலிருந்து எங்கள் மாவட்ட தலைநகருக்குச் செல்ல நான்கு மணி நேரம் பயணிக்க வேண்டும்.

அது தற்போது ஒரு மணி நேரமாக குறைந்து விட்டது.

அதற்கு காரணம் இந்த அரசு போட்டுக் கொடுத்த ரோடுகள். அது போல் மின்சாரம் இல்லாத ஊர்கள் எங்கள் பகுதியில் கிடையாது. எல்லா ஊர்களுக்கும் மின்சாரம் தற்போது இருக்கிறது. எந்த ஊரிலும் இருள் இல்லை.

அதுபோல் தான் எங்கள் வாழ்விலும் இருள் அகன்று விட்டது. பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். எந்த அச்சமும் இல்லை. அதற்கு காரணம் மக்கள் நம்பிக்கையைப் பெற்ற அரசு தான்.

மக்கள் நலனுக்கான ஆட்சி பிலாஷ்குமார், 25: இந்த அரசு தான் எங்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தந்தது. எல்லா ஊர்களிலும் குடிநீர் வசதி ஏற்படுத்தி வீடு தோறும் குழாய் இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. வீடு தோறும் கழிப்பறைகள் தந்துள்ளனர்.

ரோட்டோரங்களிலும், மறைவான இடங்களிலும் இயற்கை உபாதையை கழிக்க பெண்கள் அச்சத்துடன் தயக்கத்துடன் ஒதுங்கும் அவசியம் இல்லை. இது போல் மக்கள் நலம் விரும்பும் ஆட்சி தான் வேண்டும். அதில் எங்கள் ஊர் மக்கள் உறுதியாக உள்ளனர்.

எங்கும் நல்ல மருத்துவ வசதி பப்புகுமார், 20: அனைத்து பகுதியிலும் பள்ளிகள் அமைத்துள்ளனர். நல்ல மருத்துவ வசதி எல்லா ஊர்களிலும், எல்லா தரப்பினருக்கும் கிடைக்கிறது. என் முதல் ஓட்டு பா.ஜ., வுக்கு தான் போட்டேன். நாட்டின் வளர்ச்சியும், மக்கள் நலனும் கருதும் தலைவர்கள் தான் ஆட்சி யெ்ய வேண்டும். இதை இளம் வாக்காளராக நான் உணர்ந்தேன். என் கடமையைச் செய்தேன். ஆட்சியாளர்கள் எங்களுக்கு சிறப்பான நாட்டை தருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.

புகார்கள் இல்லா தேர்தல் சம்சுதின், 30: நான் முஜபர்பூர் மாவட்டத்தில் வசிக்கிறேன். இங்குள்ள, பாரூ சட்டசபை தொகுதியில் எனக்கு ஓட்டு உள்ளது. ஓட்டு போடுவதற்காக, விடுப்பு எடுத்து சொந்த ஊர் சென்றேன். எந்த இடையூறுகளும் இன்றி போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. யாருடைய ஓட்டும் விடுபட்டதாக புகார்களோ, குற்றச்சாட்டுகளோ வரவில்லை. வழக்கம்போல் அடையாள அட்டையை சரி பார்த்த பின் ஓட்டுப்பதிவு செய்ய அனுமதித்தனர். ஜனநாயக கடமையாற்ற வேண்டி, தமிழகத்தில் இருந்து பீஹார் சென்று ஓட்டுப்பதிவு செய்து வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இளைஞர்களிடம் ஆதரவு ராம்தேவ், 25: ஆண்டுக்கு ஒருமுறைதான், சொந்த ஊர் சென்று வருவோம். 'சாத்' பண்டிகைக்கு சென்று, தேர்தல் விழாவையும் முடித்து திரும்பியுள்ளோம். ஏராளமான இளைஞர்கள், முதன் முதலாக ஓட்டளித்தனர். இளைஞர்கள் மத்தியில், பா.ஜ. கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. பாட்னா, வைசாலி, போஜ்பூர், சமஸ்திபூர் மாவட்டங்களை சேர்ந்த தொ ழிலாளர்கள் திருப்பூரில் வேலை செய்து வருகிறோம். நாங்கள் ஓட்டளித்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை கேட்டறிந்தோம். ஓட்டு எண்ணிக்கைக்கு முன்னதாகவே, ஊரில் இருந்து கிளம்பி விட்டோம். இருப்பினும், ஓட்டு எண்ணிக்கை மற் றும் அறிவிப்பை, போனில் தெரிந்து கொண்டே வந்தோம். ரயிலிலேயே, ஆட்ட ம், பாட்டத்துடன் தேர்தல் வெற்றியை கொண்டாடினோம். திருப்பூரில், சொந்த ஊர் போல மகிழ்ச்சியாக வாழ்கிறோம். இருப்பினும், தேர்தல் என்றால், பீஹார் தான் செல்வோம்.






      Dinamalar
      Follow us