sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அதிகரிக்கும் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி

/

அதிகரிக்கும் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி

அதிகரிக்கும் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி

அதிகரிக்கும் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி


ADDED : ஜூலை 24, 2025 12:17 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், நடப்பு நிதியாண்டில் நடைமுறைக்கு வரும் என்பதால், புதிய வாய்ப்புகளை, வர்த்தகமாக மாற்றிட, தொழில்துறையினர் முழு அளவில் தயாராக வேண்டும்.

இந்தியாவின் பின்னாலடை ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்களிப்பு, 'நம்பர் 1' ஆக இருக்கிறது. அமெரிக்காவின் பங்களிப்பு 34 சதவீதமாக உள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள, ஜெர்மனி, நெதர்லாந்து, போலந்து, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி உட்பட, 27 நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகம் நடந்து வருகிறது. ஐரோப்பாவின் பங்களிப்பு, 29 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பிரிட்டனின் பங்களிப்பு, 9 சதவீதமாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பங்களிப்பு, 8 சதவீதமாகவும் இருக்கிறது. கடந்த, 2024-25ம் நிதியாண்டில், நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 65 ஆயிரத்து, 178 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; இது, முந்தைய ஆண்டில், 55 ஆயிரத்து, 798 கோடி ரூபாயாக இருந்தது.

பிரிட்டனுடன் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ஐரோப்பாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தும் முயற்சி வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், அக்., 1ம் தேதி, ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக, மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் அறிவித்துள்ளார்.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. அடுத்துள்ள, ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.

நடப்பு நிதியாண்டில் இருந்து, வளர்ந்த நாடுகளாகிய அமெரிக்கா, ஐரோப்பாவுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கட்டாயம் நடைமுறைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டு, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் மாபெரும் திருப்புமுனையாக இருக்கும் என, தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:'சீனாவுடன் வர்த்தகம் செய்து வந்த நாடுகள், கொரோனாவுக்கு பிறகு, இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகின்றன. வங்கதேசத்தில் நிலவும் குழப்பத்தால், வர்த்தகம் திசைமாறிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கு, சாதகமான சூழல் நிலவும் நேரத்தில், பிரிட்டனை தொடர்ந்து, ஐரோப்பாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக உள்ளது. வரும், அக்., மாதம் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனும் குறைந்தபட்ச வரியுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். அதாவது, 15 சதவீதம் வரை வரிவிதிப்பு குறையும் போது, வர்த்தகம் அதிகரிக்கும். ஓரிரு ஆண்டுகளில், நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி கணிசமாக உயரும்.

பருத்தி நுாலிழை ஆடையை நம்பியிருந்தால் மட்டும் போதாது; செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டும். அத்துடன், மத்திய, மாநில அரசுகளின், அவசரகால உதவி கிடைத்தால் மட்டுமே, புதிய வாய்ப்புகளையும், வர்த்தகமாக மாற்றி, தக்கவைக்க முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us