/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனிநபர் இல்லக்கழிப்பிட திட்டம்; விடுபட்ட வீடுகளில் பணி துவக்கம்
/
தனிநபர் இல்லக்கழிப்பிட திட்டம்; விடுபட்ட வீடுகளில் பணி துவக்கம்
தனிநபர் இல்லக்கழிப்பிட திட்டம்; விடுபட்ட வீடுகளில் பணி துவக்கம்
தனிநபர் இல்லக்கழிப்பிட திட்டம்; விடுபட்ட வீடுகளில் பணி துவக்கம்
ADDED : அக் 29, 2024 09:05 PM
உடுமலை : உடுமலை ஒன்றியத்தில், தனிநபர் இல்லக்கழிப்பிட திட்டத்தில், நடப்பாண்டுக்கான விடுபட்ட வீடுகளில் திட்டப்பணிகள் துவங்கியுள்ளது. இதை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அனைத்து கிராமங்களிலும், முழு சுகாதாரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உடுமலை, ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. கிராமங்களில், சுகாதாரத்தை மேம்படுத்தவும், திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்கவும், தனிநபர் இல்லக்கழிப்பிட திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில், ஒவ்வொரு வீடுகளிலும் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு, ரூ.12 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. கிராமங்களில் நுாறு சதவீத சுகாதாரத்தை கொண்டுவருவது மட்டுமே இத்திட்டத்தின் இலக்காக உள்ளது.
ஒவ்வொரு ஊராட்சியிலும், குடியிருப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில், நுாறு சதவீதம் திட்டம் நிறைவு பெற்றதையொட்டி, அந்த ஊராட்சி முழு சுகாதாரம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. 2011 கணக்கெடுப்பு படி, முதற்கட்டமாக, தனிநபர் இல்லக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. தற்போது, பெரும்பான்மையான ஊராட்சிகளின் குடியிருப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, மீண்டும், ஒவ்வொரு ஊராட்சியாக, விடுபட்டுள்ள குடியிருப்புகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும். நடப்பாண்டுக்கான விடுபட்டோர் பட்டியலில், 190 வீடுகளில் கழிப்பிடம் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில், 50 சதவீத வீடுகளில் முதற்கட்டமாக தனிநபர் இல்லக்கழிப்பிடம் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன. பணிகள் நிறைவுபெற்ற பின், திட்டத்துக்கான மானிய நிதி ஒதுக்கப்படுகிறது.
இப்பணிகளை விரைந்து முடித்து, கிராமங்களில் முழு சுகாதாரமும் ஏற்படுத்த அரசும், ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.