/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலையில் உள்விளையாட்டு அரங்கம்
/
சிவன்மலையில் உள்விளையாட்டு அரங்கம்
ADDED : ஆக 14, 2025 11:05 PM
திருப்பூர், ; காங்கயம், சிவன்மலை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள சிறு உள்விளையாட்டு அரங்கத்தை நேற்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். விழாவில், ஈரோடு எம்.பி., பிரகாஷ், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவானந்தன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம், இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும், தற்போது திறந்து வைக்கப்பட்ட உள் விளையாட்டு அரங்கம், கடந்த ஆண்டு அக்., மாதம் 2 ம் தேதி சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தலின் படி, தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம், 3 கோடி ரூபாய் மதிப்பில் அறிவிக்கப்பட்டு, பத்து இடங்களில் பணிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.