/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.எல்.ஐ., திட்டத்தை செயல்படுத்த வேண்டும்! மத்திய அரசிடம் தொழில் துறையினர் வேண்டுகோள்
/
பி.எல்.ஐ., திட்டத்தை செயல்படுத்த வேண்டும்! மத்திய அரசிடம் தொழில் துறையினர் வேண்டுகோள்
பி.எல்.ஐ., திட்டத்தை செயல்படுத்த வேண்டும்! மத்திய அரசிடம் தொழில் துறையினர் வேண்டுகோள்
பி.எல்.ஐ., திட்டத்தை செயல்படுத்த வேண்டும்! மத்திய அரசிடம் தொழில் துறையினர் வேண்டுகோள்
ADDED : ஜூலை 01, 2025 11:46 PM
திருப்பூர்; குறைந்தபட்ச முதலீட்டில், ஒட்டுமொத்த பனியன் தொழில்துறையினரும் பயன்பெறும் வகையிலான, பி.எல்.ஐ., திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, திருப்பூர் தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டாவிடம் அளித்த மனு:
திருப்பூர் பனியன் தொழிலில், அனுப்பப்பட்ட ஆடைகளுக்கு பணத்தை திரும்ப பெறுவது மிகவும் சவாலாக மாறியுள்ளது. இதனால், சிறு உற்பத்தியாளர்களின் மூலதனம் பாதிக்கப்பட்டுள்ளது.
அனுப்பிய சரக்குகளுக்கு பணம் கிடைக்க தாமதம் ஏற்பட்டு வருவதால், அடுத்தகட்ட உற்பத்தியை தொடர்வதில் நிதி சிக்கல் ஏற்படுகிறது.
ஏற்றுமதி வர்த்தகத்தில், இ.சி.ஜி.சி., என்ற காப்பீடு திட்டம் இருப்பதுபோல், உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்திலும், பிரத்யேகமான காப்பீடு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு, 45 நாட்களுக்குள் கட்டணம் வழங்க வேண்டும் என அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இதன்காரணமாக, வியாபாரிகள் தரப்பு, பெரிய நிறுவனங்களில் கடன் பெற்று, வியாபாரம் செய்ய துவங்கிவிட்டன.
இதனால், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. எனவே, பெரிய நிறுவனங்களுக்கும், 45 நாட்களுக்குள் கட்டணம் என்ற சட்டத்தை நீட்டிக்க வேண்டும்.
l தென்னிந்திய இறக்கு மதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்க (சிம்கா) தலைவர் விவேகானந்தன் அளித்த கடிதத்தில், 'பின்னலாடை சார்ந்த தொழில்களில் புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த, 'ஏ-டப்' திட்டம் போன்ற திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
குறு, சிறு தொழில்களை துவக்க ஏதுவாக, ஒரு கோடி ரூபாய் முதலீட்டிலான, பி.எல்.ஐ., திட் டத்தை அறிவிக்க வேண்டும். மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், பின்னலாடை தொழில் வாரியத்தை உருவாக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.
l சாய ஆலைகள் சங்க தலைவர் காந்திராஜன் கொடுத்த கடிதத்தில், 'குறு, சிறு நிறுவனங்களுக்கான, 45 நாட்களுக்குள் 'பேமென்ட்' என்ற திட்டத்தை, முறையாக செயல்படுத்த வேண்டும்.
குறு, சிறு தொழில்கள் தினவிழாவில், ஜனாதிபதி பேசுகையில், ''45 நாட்களுக்குள் 'பேமென்ட' கொடுக்க வேண்டுமென சட்டம் இருந்தும், சரிவர செயல்படுவதில்லை; அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்,' என வலியுறுத்தியுள்ளார்.
தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக, 'ஏ-டப்' போன்ற திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
பசுமை சாயமிடல் தொழில்நுட்பத்துடன் புதிய மையம் அமைக்க உதவ வேண்டும். திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் அமைப்பினரும் பயன்பெறும் வகையில், புதிய சலுகைகளுடன், பி.எல்.ஐ., திட்டம் உருவாக்கப்பட வேண்டும்,' என்று தெரிவித்துள்ளார்.