/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அழுத்தும் மின் கட்டண சுமை விழிபிதுங்கும் தொழில் துறை
/
அழுத்தும் மின் கட்டண சுமை விழிபிதுங்கும் தொழில் துறை
அழுத்தும் மின் கட்டண சுமை விழிபிதுங்கும் தொழில் துறை
அழுத்தும் மின் கட்டண சுமை விழிபிதுங்கும் தொழில் துறை
ADDED : டிச 29, 2025 05:23 AM
பின்னலாடை, விசைத்தறி, கறிக்கோழி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை மையமாக கொண்டது திருப்பூர் மாவட்டம். மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டதுடன், ஒவ்வொரு ஆண்டும், 6 சதவீதம் உயர்த்தப்படுவதால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது; பெட்டிக்கடை துவங்கி, பெரிய ஷாப்பிங் மால்கள் வரை சிக்கலால் தவிக்கின்றன.
தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஜெயபால் கூறியதாவது:
இந்தியாவில், தமிழகத்துக்கு போட்டியாக உள்ள 10 மாநிலங்களில், மின் கட்டணம் குறைவு. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மின்சார கேட்பு கட்டணம், கிலோவாட் 350 ரூபாயாக இருந்தது, 608 ரூபாயாக உயர்ந்துள்ளது. தாழ்வழுத்த மின்சாரத்துக்கு, 35 ரூபாயாக இருந்தது; 165 ரூபாயாக உயர்ந்துள்ளது. தொழில் இயங்கினாலும், இயங்காவிட்டாலும், மாதம், 19 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
உயரழுத்த தொழில்துறையினர், தினமும், 10 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது. கோரிக்கையை தமிழக அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. தொழிற்சாலைகளுக்கான சொத்துவரி, குப்பைவரி, தொழில்வரியும், பலமடங்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், மூலப்பொருள் இல்லாமலேயே, 8,000 விதமான பொருட்கள் உற்பத்தி செய்கிறோம். வடமாநிலங்களில் இருந்து மூலப்பொருட்களை வாங்கி, தமிழகத்தில் தொழில் நடக்கிறது. மின்கட்டண உயர்வு, பல்வகை வரி உயர்வுகளால், குறு, சிறு தொழில்கள் நலிவடைந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், உற்பத்தி துறை நலிவடைந்துள்ளது; சேவைத்துறை மூன்று மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. முதல்வர் கருணை காட்டி, மின் கட்டண உயர்வுகளை வாபஸ் பெற்றால் மட்டுமே, குறு, சிறு தொழில்களை பாதுகாக்க முடியும்.

