/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அன்னதானப் பிரபுவே சரணம் அய்யப்பா!
/
அன்னதானப் பிரபுவே சரணம் அய்யப்பா!
ADDED : டிச 29, 2025 05:24 AM

திருப்பூர்: அகில பாரத அய்யப்ப சேவா சங்கம், மகர ஜோதி பக்தர்கள் குழு சார்பில், 30ம் ஆண்டு அன்ன தான விழா நேற்று நடந்தது.
பாரப்பாளையம் மைதானத்தில் குடில் அமைத்து, அய்யப்ப சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த, 26ம் தேதி காலை கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்கின.
கருவம்பாளையம் மாகா ளியம்மன் கோவிலில் இருந்து செண்டை மேளத்துடன் ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம், சுனில்குமார் சுவாமி தலைமையில், ஸ்ரீஅய்யப்ப சுவாமி பஜனை, கன்னிசாமி பூஜை, கலசபூஜை, பஜனை மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று, காலை மீண்டும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பெருந்துறை மடாலயம் பொன்னுசாமி சுவாமிகள், லட்சுமிநாயக்கன்பாளையம் மூர்த்திலிங்க தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், அன்னதானம் துவக்கி வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

