/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொற்று தடுப்பு நடவடிக்கை அதிகாரி விரைவில் ஆய்வு
/
தொற்று தடுப்பு நடவடிக்கை அதிகாரி விரைவில் ஆய்வு
ADDED : அக் 19, 2024 11:38 PM
திருப்பூர்: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளை பொது சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க, மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பணியை மேற்பார்வையிட, மாநிலம் முழுதும் எட்டு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், மேற்கு மண்டலம், திருப்பூர் மாவட்ட பொறுப்பு அலுவலராக, சுகாதாரத்துறை இணை இயக்குனர் நிர்மல்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகத்தின் உத்தரவை பின்பற்றி, திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை மூலம் மாவட்டத்தின் ஒன்பது தாலுகாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய் தடுப்பு, சுகாதார பணிகள் குறித்து விரைவில் ஆய்வு நடத்த உள்ளார். இதற்கான தேவையான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.