ADDED : ஜன 26, 2025 03:23 AM
திருப்பூர்: சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் பழனிசாமி கூறியதாவது:திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சமீப காலமாக வங்க தேசத்தைச் சேர்ந்த நபர்கள் உரிய ஆவணங்கள் இன்றியும், போலியான ஆவணங்களுடனும் பிடிபட்டு வருகின்றனர்.
வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள நபர்கள் அதிகளவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாகப் பணி புரிந்து தங்கியுள்ளனர்.
போலீசார் விசாரணையில் தொடர்ந்து இது போன்ற நபர்கள் பிடிபட்டு வருகின்றனர்.சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மில்கள், விசைத்தறி கூடங்கள், குவாரிகள், ஓட்டல்கள் என ஏராளமானவை உள்ளன.
இவற்றில் வங்க தேசத்தினர் யாராவது இருந்தால் அது குறித்தும், சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் அவர்கள் குறித்தும், நிறுவன உரிமையாளர்கள் முன் வந்து தகவல் தர வேண்டும்.
பேரூராட்சி நிர்வாகம் அல்லது மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

