/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மாசுபாடு குறைந்த தொழில் நகரம் திருப்பூர்' சுரற்றுச்சூழல் தணிக்கை கூட்டத்தில் தகவல்
/
'மாசுபாடு குறைந்த தொழில் நகரம் திருப்பூர்' சுரற்றுச்சூழல் தணிக்கை கூட்டத்தில் தகவல்
'மாசுபாடு குறைந்த தொழில் நகரம் திருப்பூர்' சுரற்றுச்சூழல் தணிக்கை கூட்டத்தில் தகவல்
'மாசுபாடு குறைந்த தொழில் நகரம் திருப்பூர்' சுரற்றுச்சூழல் தணிக்கை கூட்டத்தில் தகவல்
ADDED : ஏப் 02, 2025 07:16 AM

திருப்பூர்,: இந்தியாவிலேயே, காற்று மாசுபாடு குறைந்த நகரமாக திருப்பூர் மாறியுள்ளதாக, திருப்பூர் பாப்பீஸ் ஓட்டலில் நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு தணிக்கை தொடர்பான சந்திப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், 'பேர் டிரேடு இந்தியா' நிறுவனம் சார்பில், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தணிக்கை குறித்த சந்திப்பு கூட்டம், பாப்பீஸ் ஓட்டலில் நடந்தது.
அதில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி பேசியதாவது:
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி மற்றும் சர்வதேச போட்டியை சமாளிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளால், வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
தொழில் வளம் பங்களிப்போர் கூட்டமைப்பின் மூலமாகவும், பின்னலாடை தொழில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண் தொழிலாளர் பாதுகாப்புக்காக, புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
இந்தியாவிலேயே, காற்று மாசுபாடு குறைந்த நகரமாக திருப்பூர் மாறியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆய்வின்படி, வனத்துக்குள் திருப்பூர் வாயிலாக, திருப்பூரின் வெப்பநிலை, கடந்த கோடைகாலத்தில், கோவையை காட்டிலும் 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, 'பேர் டிரேடு இந்தியா' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் அபிேஷக் ஜானி பேசுகையில், ''குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்குள், வளம் குன்றா வளர்ச்சி நிலை நடைமுறைகளை ஒருங்கிணைத்து வருகிறோம். சமீபத்தில், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற நாடுகள், ஏராளமான பாதுகாப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக உற்பத்தியில், வளம் குன்றா வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர்.
அதற்காகவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தணிக்கை செய்து, ஆவணப்படுத்துவதன் வாயிலாக, வளர்ந்த நாடுகளில் இருந்து புதிய ஆர்டர்களை திருப்பூர் வரவழைக்க முடியும்,'' என்றார்.

