UPDATED : நவ 13, 2026 07:19 PM
ADDED : நவ 13, 2026 07:14 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் அரண்மனைப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், சாரண ஆசிரியர்களுக்கான தகவல் பயிற்சி முகாம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் அவிநாசி வட்டார ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
சாரண இயக்கத்தின் செயல்பாடுகள், அதன் மூலம் மாணவர்கள் பெறும் நன்மைகள், பள்ளிகளில் சாரணர் படை தொடங்குவதன் அவசியம் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சித்ரா தலைமை வகித்தார். மாவட்ட கமிஷனர் ராஜாராம், மாவட்ட இணைச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட அமைப்பு கமிஷனர் சண்முகநாதன் உள்ளிட்டோர் பேசினர்.
