UPDATED : நவ 13, 2026 07:39 PM
ADDED : நவ 13, 2026 07:36 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்: அமராவதிபாளையம் டி.கே.டி. குளோபல் பப்ளிக் பள்ளியில், 'ஸ்பார்க் சயின்ஸ்' என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மழலையர் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்று, தாங்களே உருவாக்கிய செயல்முறை மாதிரிகள், கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் திட்டங்களை காட்சிப்படுத்தினர். அவற்றின் செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கினர்.
பெற்றோர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவர்களின் படைப்பாற்றலைப் பாராட்டினர். கண்காட்சியில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை உருவாக்கிய 150-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் குழந்தைகள் தின விழாவில் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.
