/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண்துறைக்கு கட்டமைப்பு வசதி தேவை: மாநில செயற்குழுவில் தீர்மானம்
/
வேளாண்துறைக்கு கட்டமைப்பு வசதி தேவை: மாநில செயற்குழுவில் தீர்மானம்
வேளாண்துறைக்கு கட்டமைப்பு வசதி தேவை: மாநில செயற்குழுவில் தீர்மானம்
வேளாண்துறைக்கு கட்டமைப்பு வசதி தேவை: மாநில செயற்குழுவில் தீர்மானம்
ADDED : செப் 22, 2024 11:57 PM

உடுமலை : வேளாண் - உழவர் நலத்துறை சார்ந்த பணிகளை விரைவாக முடிக்கும் வகையில், தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என, தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் உடுமலையில் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் வைரமுத்து வரவேற்றார்.
மாநில துணை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் மெல்கிசேதக் தீர்மானங்கள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், எவ்வித அடிப்படை விபரங்களும் வழங்கப்படாமல், பயிர் சேத கணக்கீடு, டிஜிடல் சர்வே உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள் உள்ளிட்டோர் அச்சுறுத்தப்படுகின்றனர்.
அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அலுவலர்கள் தயாராக இருப்பது குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையரிடம் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்கடிதத்தில், அதிகபட்சம் 800 ெஹக்டேர் வரை அல்லது இரு வருவாய் கிராமத்துக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர், உதவியாளர் பணியிடத்தை உருவாக்கி லேப்-டாப் உள்ளிட்ட கருவிகள் மற்றும் கட்டடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளோம்.
கட்டமைப்பு வசதிகளை வழங்கினால், பயிர் சேத கணக்கீடு, இலவச மின் இணைப்பு சான்று வழங்குதல், டிஜிட்டல் சர்வே உள்ளிட்ட வேளாண் - உழவர் நலத்துறை சார்ந்த அனைத்து பணிகளையும் எளிதாக மேற்கொள்ள முடியும்.
இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலு நன்றி தெரிவித்தார்.