ADDED : அக் 30, 2024 12:10 AM
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள, ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஷண்முக சுப்பிரமணியர் சன்னதியில், கந்தசஷ்டி விழா, 2ம் தேதி துவங்குகிறது.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, சூரசம்ஹாரம் வரை, தினமும் ஒவ்வொரு வண்ண மலர்களால் அலங்கார பூஜைகள் நடக்கின்றன. மகா மண்டபத்தில், யாகசாலை அமைக்கப்பட்டு, தினமும் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. காலை 10:00 மணிக்கு யாகசாலை பூஜையும், தொடர்ந்து, ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத ஷண்முக சுப்ரமணியர் அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்க உள்ளன.
காப்புக்கட்டும் 2ம் தேதி, நீலம், 3ம் தேதி இளஞ்சிவப்பு, 4ம் தேதி வெள்ளை, 5ம் தேதி சிவப்பு, 6ம் தேதி பச்சை, 7ம் தேதி மஞ்சள் மற்றும் 8ம் தேதி அனைத்து வண்ண மலர்களால் அலங்காரமும் நடக்க உள்ளது. சூரசம்ஹாரம், மாலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை நடக்கும். நவ., 8ம் தேதி காலை, 10:00 முதல், 12:30 மணி வரை, திருக்கல்யாணஉற்சவ விழாவும் நடக்க உள்ளது.