/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி பணி துவக்கம்
/
தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி பணி துவக்கம்
ADDED : செப் 20, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : வெள்ளகோவில், முத்துார், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதனால், அனைத்து தரப்பினர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். விவசாயிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை துவக்கினர்.
இதனை தொடர்ந்து, வெள்ளகோவில் நகராட்சி தலைவர் கனியரசி, கமிஷனர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தலைமையில், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், தங்கம் டிரஸ்ட் பணியாளர்கள் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, 12 நாய்களுக்கு கருத்தடையும், ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.