/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு துறையினருக்கு புத்தாக்கப் பயிற்சி
/
கூட்டுறவு துறையினருக்கு புத்தாக்கப் பயிற்சி
ADDED : ஜன 24, 2025 11:38 PM

திருப்பூர்; கூட்டுறவு துறை மூலம் அதில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று நாள் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும்.
அவ்வகையில் நடப்பாண்டுக்கான இப்பயிற்சி நேற்று முன்தினம் இணை பதிவாளர் அலுவலக கூட்டரங்கில் துவங்கியது. இணைப் பதிவாளர் பிரபு தலைமை வகித்து இதை துவக்கி வைத்தார். துணை பதிவாளர்கள் தமிழ்செல்வன், ஸ்ரீதர், தேவி, உதயகுமார், புவனேஸ்வரி, சரவணகுமார், கண்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சார் பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். கூட்டுறவு துறையின் பிரிவு வாரியான செயல்பாடுகள், சங்க நடவடிக்கைகள், சட்ட திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் இதில் பங்கேற்ற அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் துவங்கிய இந்த புத்தாக்கப் பயிற்சி இன்றுடன் நிறைவடைகிறது.

